| வேட்டை படத்தின் சூட்டிங் காரைக்குடியில் நடந்து வருகிறது. நாயகன் ஆர்யாவும், நாயகி அமலாபாலும் காரைக்குடியில் முகாமிட்டு சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்கள். `பையா படத்தை தயாரித்து, இயக்கிய டைரக்டர் லிங்குசாமி அடுத்து, `வேட்டை என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். ஆர்யா, மாதவன், சமீராரெட்டி, அமலாபால் நடிக்கும் இந்த படத்தின் முதல்கட்ட சூட்டிங் காரைக்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரபட்டினம், மணப்பாடு ஆகிய இடங்களில் நடந்தது. இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் காரைக்குடியில் படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். ஆர்யா - அமலா பால் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமாக்கப்பட்டு வருகிறது. |
Sunday, 6 November 2011
அமலாபாலுடன் காரைக்குடியில் ஆர்யா! - வேட்டை!
இந்தியில் ரீ-மேக் ஆக இருக்கிறது மங்காத்தா!
| தமிழில் சக்கபோடு போட்ட அஜித்தின் மங்காத்தா, இந்தியில் ரீ-மேக் ஆக இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், த்ரிஷா, லட்சுமிராய், வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் மங்காத்தா. அஜித்தின் 50வது படமான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட்டான இப்படத்தை இந்தியிலும் ரீ-மேக் செய்ய இயக்க இருக்கின்றனர். இதற்கான உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பெற்றுள்ளார். இதுகுறித்து ஞானவேல் ராஜா கூறுகையில், அஜித் சாரின் மங்காத்தா படத்தை இந்தியில் எடுக்க இருப்பது உண்மை தான். அதற்கான உரிமையை நான் தான் பெற்றுள்ளேன். வெங்கட் பிரபுவே இயக்க இருக்கிறார். படத்தில் யார், யார் நடிக்க போகிறார்கள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நடிகர், நடிகையர் தேர்வு முடிந்தபின்னர் படம் பற்றிய முழு அறிவிப்பையும் விரைவில் வெளியிடுவோம் என்றார். முன்னதாக மங்காத்தா படத்தை ஞானவேல் ராஜா தான் வெளியிடுவதாக இருந்து விளம்பரம் எல்லாம் வெளியான நிலையில், கடைசி நேரத்தில் சில பல பிரச்சனைகளால் அது வேறு நிறுவனத்திற்கு கைமாறியது குறிப்பிடத்தக்கது. |
ஆடு வெட்டி பட தொடக்க விழா! - பாரதிராஜா!
ஒரு கோவில் திருவிழா போல் செட் அமைத்து, அதில் ஆடு, கடா வெட்டி, பொங்கல் வைக்கிறார்கள், விழாவில் கலந்துகொள்பவர்கள், கிராமத்து திருவிழாவுக்குள் வந்தது போல் உணர வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடாம்!
Subscribe to:
Posts (Atom)