காதலி கிடைக்காமல் காத்திருக்கும் ஜீவா! (Kadhalikka Neramillai Movie Title for Jeeva's Film)
அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதிய படத்திற்கு காதலிக்க நேரமில்லை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை வெளியில் சொல்ல முடியாதளவுக்கு சிக்கல். மேயச்சல் நிலத்து வாய்க்கால் தண்ணி மாதிரி ஆளாளுக்கு உறிஞ்சிக் குடிக்க முடியாது டைட்டில்களை. நல்ல நல்ல நடிகர்கள் நடித்த படத்தின் தலைப்புகளையெல்லாம் உப்புமா நடிகர்கள் படத்திற்கு வைத்து அவர்களையும் கேவலப்படுத்தி வந்த சிலருக்கு செமத்தியாக கடிவாளம் போட்டது தயாரிப்பாளர் சங்கம். இனிமேல் பழைய பட தலைப்புகளை யார் வைத்தாலும், சம்பந்தப்பட்ட பட தயாரிப்பாளரிடமிருந்தோ அல்லது அவர்களின் வாரிசுகளிடமிருந்தோ நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் வாங்கி வர வேண்டும். இல்லையென்றால் அந்த தலைப்புக்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டது. இந்த சிக்கலில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஜீவாவும் அகமதுவும். காதலிக்க நேரமில்லை படத்தை இயக்கிய ஸ்ரீதர் தற்போது உயிரோடு இல்லை. அவரது உறவினர்களிடம் இந்த சர்டிபிகேட்டை வாங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறதாம். இதுவாவது பரவாயில்லை, படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேரும் நடிகையை தேடியே நெடும்பயணம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தீக்ஷா சேத், தமன்னா, ரிச்சா கங்கோபாத்யா என்று முப்பெரும் தேவிகளும் மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் புதுமுகங்களை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். நேரங்கிடச்சா காதலிங்க நண்பா........! www.koodal.com
No comments:
Post a Comment