சமீபகாலமாக எதார்த்தமான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் எதார்த்தமான பாடல்களை எழுதி, பாடி அசத்துவதில் கெட்டிகாரான நடிகர் சிம்பு வரிசையில் இப்போது தனுஷும் சேர்ந்திருக்கிறார். சிம்புவை போலவவே, சமீபகாலமாக தனுஷும் பாடல் வரிகள் எழுதி, பாடவும் செய்து வருகிறார். விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய 'மயக்கம் என்ன' படத்தில், தனுஷ் ஒரு பாடல் எழுதி பாடியிருந்தார். அதேபோல் இப்போது அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், ஹீரோவாக நடித்து வரும் 3 படத்திலும் ஒரு பாட்டு எழுதி, பாடியும் அசத்தியிருக்கிறார். "வொய் திஸ் கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறி டி..." என்று தொடங்கும் இப்பாடலை தனுஷ் பாட, இடையிடையே ஸ்ருதி ஹாஸனும், ஐஸ்வர்யாவும் குரல் கொடுத்துள்ளனர். அனிருத் என்ற புதிய இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். நேற்று முன்தினம் இந்த ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டது. இந்தபாடலில் விஷேசம் என்னவென்றால் பாடல் முழுக்க முழுக்க தங்கிலீஷில் எழுதப்பட்டிருப்பதுதான். இந்தப் பாட்டு வெளியான கையோடு படு பாப்புலராகிவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. யூ ட்யூப், பேஸ்புக் என சமூக வலை தளங்களில் சக்கைப் போடு போடுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக இந்த ஒரு பாடலை மட்டும் வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா, மற்ற பாடல்களை அடுத்த விழாவில் வெளியிடுகிறார். சார்... உங்களுக்கு ஏன் இந்த கொல வெறி..?!
www.koodal.com
www.koodal.com
No comments:
Post a Comment