மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Wednesday, 28 December 2011

மணிரத்னம் ஆபிசில் பசுபதி ரகசியம் காக்குறாங்களாமா...


கூத்துப்பட்டறை நடிகர்களை கொல்லன் பட்டறை இரும்பு போலவே பயன்படுத்தி வருகிறார்கள் ரசிகர்கள். அவ்வளவு அடி மற்றும் நொறுக்குதலும் இவர்களுக்குதான் கிடைக்கிறது அடுக்கடுக்காக.
பெரும் எதிர்பார்ப்போடு தமிழ்சினிமாவில் வீறு நடை போட்ட பசுபதி ஒருPasupathiகூத்துப்பட்டறை தயாரிப்புதான். ஆனால் இவராகவே வெட்டிக் கொண்ட குழியா, அல்லது மண்வெட்டியோடு மெனக்கட்டு வந்தார்களா தெரியாது. சில பல இயக்குனர்களால் வெகு சீக்கிரத்தில் காணாமல் போனார் பசுபதி. நல்லவேளையாக அரவான் படத்தில் முக்கியமான ரோல் கொடுத்து இவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் வசந்த பாலன்.
இந்த நேரத்தில்தான் இன்னொரு நல்ல செய்தி வந்திருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் பசுபதியை தனது அலுவலகத்திற்கு அழைத்தாராம் மணிரத்னம். தற்போது இயக்கவிருக்கும் பூக்கடை படத்தில் முக்கிய ரோல் இருப்பதாகவும், அதில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம்.
அரசல் புரசலாக கசிந்த தகவலையடுத்து பலரும் பசுபதிக்கு போன் செய்து அப்படியா என்று கேட்டால், அப்படியா என்கிறாராம் அவரும் அதே பிரமிப்புடன். வேறொன்றுமில்லை, இங்கு வந்துட்டு போன விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றாராம் மணி.
ஐஸ்வர்யா ராய் நடிச்சாலே அலட்டிக் கொள்ளாத ஆட்களுக்கு, மணி அண்டு பசுபதியின் இந்த ரகசிய காப்பு பிரமாணம் ங்கொய்யென்று சிரிக்க வைக்கிறது.

அஞ்சலியின் சிறப்பு கொள்கை புதுமுக நடிகர்கள் நெகிழ்ச்சி


பசி நேரத்தில் பிள்ளையார் சுழி போட்டாலும், அது கொழுக்கட்டை வடிவத்தில்தான்Anjaliஇருக்கும். மனம் போலதான் மற்றதெல்லாம் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இது. இதை அப்படியே பின் பற்றுகிறார் அமலா பால். தன்னுடன் ஆரம்பத்தில் நடித்த சின்ன சின்ன நடிகர்களை எங்காவது பார்த்தாலோ, அல்லது அவர்கள் போன் லைனில் வந்தாலோ கூட மதிப்பதில்லையாம். இதை சொல்லி சொல்லி புலம்புகிறார்கள் வீரசேகரன், சிந்து சமவெளி படங்களில் இவருடன் நடித்த ஹீரோக்கள்.
ஆனால் அஞ்சலி அப்படியல்ல. இன்னமும் இவரது மனப் புத்தகத்தில் புதுமுகங்களுக்கு இடம் இருக்கிறது. நல்ல கேரக்டர் வந்தா போதும். அதுல யாரு எனக்கு ஜோடியா நடிக்கிறாங்கன்னு நான் பார்ப்பதே இல்லை என்கிற அஞ்சலி, இப்போது விக்ரமுடன் கரிகாலன் படத்தில் நடிக்கிறார். அமலாவும் விக்ரமுடன் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் தனது பழைய நண்பர்களை எடைக்குப் போட்டு பேரீச்சம் பழம் வாங்கினார்.
ஆனால் விக்ரமுடன் நடித்துக் கொண்டிருக்கும் போதே, மதன் என்ற புதுமுகத்துடன் ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்டார் அஞ்சலி. இந்த மதன் இதுதாண்டா போலீஸ் ராஜசேகரின் சகோதரி மகன் என்கிறார்கள்.
எது எப்படியோ, அஞ்சலியின் சிறுமுதலீட்டு கொள்கைக்கு ஒரு சிறப்பு வணக்கம்.

பிரதமர் தரப்போகும் விருந்து தனுஷ் உற்சாகம்


கொலவெறிக்கான பேடன்ட் ரைட்ஸ் வடிவேலுவிடம் இருக்க, பரிசுகளை அள்ளிக்Dhanush - Manmohan Singhகொண்டு போகிற வேலையை மட்டும் பார்க்கிறார் தனுஷ். இந்த கொலை வெறியின் உச்சத்தை கண்டும் காணாமல் இருக்க வேண்டிய நிலைமைதான் வடிவேலுவுக்கு. ஆனால் தனுஷ் இது பற்றியெல்லாம் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை. நாளொரு அழைப்பும், பொழுதொரு பேமென்ட்டுமாக அள்ளிக் கட்டிக் கொண்டிருக்கிறார் மனுஷன்.
இதோடு முடிந்திருந்தால் கூட ஆச்சர்யம் இல்லை. பிரதமரே இவரை விருந்துக்கு அழைத்திருக்கிறாராம். ஒவ்வொரு வருட இறுதியிலும் நாடெங்கிலும் உள்ள முக்கியமான விஐபிகளுக்கு விருந்தளிப்பார் பிரதமர். இந்த முறையும் அப்படி விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பட்டியலில் தனுஷின் பெயரும் இருக்கிறது.
இந்த திடீர் செல்வாக்குக்கு காரணம், கொலவெறிடிதான் என்பது சொல்லாமலே புரிந்திருக்கும். இந்த விருந்தில் வடக்கத்திய நட்சத்திரங்கள் பலரும் வருவார்கள். நான் இயக்கும் முதல் படம் இந்தியில்தான் என்று கூறி வரும் தனுஷுக்கு இந்த விருந்து ஏராளமான வரவுகளை அள்ளித்தரும் இடமாக இருக்கும்.