மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Wednesday, 16 November 2011

கல்யாணம் இப்போ இல்ல... ஜெனிலியா மறுப்பு

பிப்ரவரி 4 ந் தேதி ரித்தேஷ் தேஷ்முக்கின் முழு கட்டுப்பாட்டுக்குள் வரப்போகிறார் ஜெனிலியா. ஆமாம்... அன்றுதான் இருவருக்கும் திருமணம் என்றெல்லாம் புரோகிதர் வேலை பார்த்துவிட்டது மீடியா. அதை நானல்லவா முடிவு பண்ணணும்? மீடியாவுக்கு எதுக்கு இந்த வேலையெல்லாம் என்று தாண்டி குதித்துக் கொண்டிருக்கிறார் ஜெனிலியா.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என்று நான்கு மொழிகளிலும் டாப் Geneliaஹீரோயின்களில் ஒருவராகிவிட்டார் ஜெனி. அவரது காதல் பற்றியும் கல்யாணம் பற்றியும் அவ்வப்போது வதந்திகளை கிளப்பி குளிர் காய்ந்து கொண்டிருந்தது மீடியா. ஒரு சுவாசத்திற்கும் மறு சுவாசத்திற்கும் நடுவிலிருக்கிற இடைவெளி அளவுக்கு கூட விஷயம் வெளியே கசிந்துவிடக் கூடாது என்று ரகசியம் காத்த ஜெனிலியாவுக்கு பெருத்த ஏமாற்றம். இருவரும் எங்கே சந்திக்கிறார்கள் என்பது வரைக்கும் செய்திகளை பஞ்ச் பஞ்ச்சாக வெளியிட்டார்கள் நான்கு மொழி பத்திரிகையாளர்களும்.
இதில் எரிச்சலாகியிருந்த அவருக்கு நேற்றைய தினம் இன்னும் கொடுமை. பிப்ரவரி 4 ந் தேதி இருவருக்கும் திருமணம் என்ற செய்தியை நாடு முழுக்க பரவவிட்டது மீடியா. நேற்றே இதை மறுத்திருக்கிறார் ஜெனிலியா.
நாங்க ஒண்ணும் ரகசியமா கல்யாணம் பண்ணிக்க மாட்டோம். ஊர் உலகத்துக்கு அறிவிச்சுட்டுதான் செஞ்சுப்போம். அதற்குள் ஏன் நீங்களாகவே ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும் என்றெல்லாம் அழுது புலம்பியிருக்கும் அவர், விரைவில் நாங்களே ஒரு தேதியை சொல்வோம். அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க என்று கூறிவிட்டார்.
ஜெனிலியா இப்படி சொல்வதற்கு நிறைய காரணம் இருக்கிறது. இவரை நம்பி பணத்தை கொட்டி படமெடுத்த தயாரிப்பாளர்கள், இந்த திருமண செய்தியால் பெருத்த அப்செட். ஜெனிலியா நடித்த படங்கள் ரிலீஸ் ஆன பின்பு வேண்டுமானால் இந்த கல்யாணம் நடக்கட்டும் என்று கூறியிருப்பதாக தகவல்.

நயன்தாராவுக்கு பிறந்த நாள் கிஃப்ட் அறிவிக்கிறார் திருமண தேதியை!

நயன்தாராவின் கல்யாண புடவை எந்த கடையில் தொங்கிக் கொண்டிருக்கிறதோ, Nayantharaஅல்லது இன்னும் நெய்யப்படவே இல்லையோ என்றெல்லாம் கவலைப்பட்ட ரசிகனுக்கு சீக்கிரமே ஒரு ஆறுதல் செய்தி வரப்போகிறது. அதுவும் எதிர்வரும் 18 ந் தேதி.
இந்த நாளில்தான் இந்த பூமியில் அவதரித்தாராம் அழகி நயன்தாரா. இதுபோன்ற விசேஷமான நாட்களில் ஏதாவது ஒரு பரிசை கொடுத்து ஒருவருக்கொருவர் கரைந்து போவது காதல் தேசத்தில் சகஜம்தான். ஒரு கொண்டை ஊசி கூட, காதலர்களின் மனசுக்குள் ஏ.சி போட்டுவிட்டு போகிற தருணம் அது.
இந்த 18 ந் தேதி அதைதான் செய்யப் போகிறாராம் பிரபுதேவா. பல காலமாக திருமண தேதி எப்போது என்று நச்சரித்துக் கொண்டிருந்த நயன்தாராவிடம், அவரது விசேஷமான இந்த பிறந்த நாளன்று அந்த தேதியை சொல்லப் போகிறாராம். அடுத்த கணமே அது மீடியாவில் வெளிவந்துவிடும் என்பதை சொல்லவும் வேண்டுமா?

ஒஸ்தியை நானே ரிலீஸ் செய்வேன் டி.ராஜேந்தர் ஆவேசம்


மலையாக இருந்தாலும் அதை கூழாங்கல்லாக உருட்டி பார்க்கலாமே என்று நினைப்பவர் டி.ராஜேந்தர். தன்னம்பிக்கையை தக்காளி சூப்பை போல நாளுக்கு மூன்று வேளை ருசிக்கிற ஆள் என்பதாலேயே இவர் மீது தனி கவனம் வைத்திருக்கிறார்கள் ரசிகர்களும்.
அப்படிப்பட்ட டி.ராஜேந்தரின் தன்னம்பிக்கையில் லேசாக குண்டூசியால் கீறி கொதிக்க Karthika - Vasundhara - Namithaவிட்டு விட்டது ரிலையன்ஸ் நிறுவனம். வேறொன்றுமில்லை, ஒஸ்தி படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடலாம் என்று நினைத்து அக்ரிமென்ட்டும் போட்டுவிட்டார்கள் இவர்கள். ஆனால் விநியோகஸ்தர் களிடம் போனால், சிம்பு நடிச்ச வானம் படம் அவ்வளவு பெரிசா போகலையே என்கிறார்களாம். ரிலையன்ஸ் கொடுத்த பணத்திற்கும், வாங்க வந்தவர்கள் சொன்ன விலைக்கும் ஒரு அனகோண்டாவை நிற்க வைக்கிற அளவுக்கு ஹைட்!
கையை மட்டுமல்ல, விரலையும் பிசைந்து கொண்டு நின்ற ரிலையன்ஸ் நிறுவனத்தை அலட்சியமாக நோக்கிய டி.ஆர், படத்தை எங்கிட்ட கொடுத்திட்டு போங்க. நான் பார்த்துக்குறேன் என்ற சவால் விட்டுவிட்டார். இதுதான் சந்தர்பம் என்று அவர்களும் படத்தை கைமாற்றிவிட்டிருக்கிறார்கள்.
ரிலையன்சிடம் மவுனமாக விலையை குறைத்த அதே விநியோகஸ்தர்கள் டிஆரிடம் சிரித்துக் கொண்டே குறைக்க முயல, விடுங்கய்யா நானே ரிலீஸ் பண்றேன் என்கிறாராம் ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் மிக்ஸ் பண்ணியபடி.