அல்லாடிக் கொண்டிருக்கிறது ஒரு சேனல். ரஜினி- கமல் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் நினைத்தாலே இனிக்கும் படத்தின் வெளியீட்டு உரிமை இவர்கள் வசம் இருக்கிறது. இப்போது அந்த படத்தை மறுபடியும் வெளியிட்டால் எப்படியிருக்கும்?
பத்பநாபஸ்வாமி கோவிலுக்கு பாதாள அறை கனெக்ஷன் கிடைத்த மாதிரி இருக்குமே...! பெருத்த நம்பிக்கையில் படத்தை வெளியிட நாள் குறித்துவிட்டார்கள். ரஜினி, கமல், பாலசந்தர் ஆகிய மூவரையும் அழைத்து ஒரு மாபெரும் அறிவிப்பையும் வெளியிட துடித்தார்கள். ஆனால் அவர்கள் மூவருமே தயங்க... அய்யருக்காக காத்திருக்குமா அமாவாசை? அநேகமாக படம் ஆகஸ்ட்டில் வெளியிடப்படலாம்.
இதற்கிடையில் 'பிரமோஷனுக்காக எப்ப கூப்பிட்டாலும் நான் ரெடி' என்று கூறிவிட்டாராம் அப்படத்தின் ஹீரோயினான ஜெயப்ரதா. உத்தரப் பிரதேசத்தில் முக்கியமான அரசியல்வாதியாக பரபரப்பு காட்டும் ஜெயப்ரதா இந்த படம் வருவதில் காட்டுகிற அக்கறையை கண்டு அதிசயிக்கிறது சேனல்.
No comments:
Post a Comment