இயக்குனர்களின் முக்கியமான லேண்ட் மார்க் ஆகிவிட்டது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ். ஒரு காலத்தில் மளிகை கடையில் பொட்டலம் கட்டிக் கொண்டிருந்த போதே தனக்குண்டான தன்னம் பிக்கையையும் சேர்த்து பொட்டலமாக கட்டிக் கொண்டு சென்னைக்கு கிளம்பியவர் லிங்குசாமி. வெறும் டைரக்டராக அறிமுக மாகியிருந்தாலும், இன்றைய தேதியில் நம்பர் ஒன் தயாரிப்பாளர்களின் லிஸ்ட்டில் லிங்குசாமிக்கும் முக்கிய இடம் இருக்கிறது.
நான் சௌத்ரி சார் ஆபிஸ்ல டிஸ்கஷன்ல இருக்கும் போது அதே காம்பளக்சில் நாலு படங்களின் வேலைகள் நடந்துகிட்டு இருக்கும். ஒரு காலத்தில் அந்த இடத்தில்தான் தேவர் பிலிம்ஸ் ஆபிஸ் இருந்ததாம். அவரும் ஒரே நேரத்தில் நான்கைந்து பட வேலைகளை செய்து கொண்டு இருப்பாராம். எனக்கும் அப்படி ஒரு ஆசை மனதில் இருந்தது. இன்று என்னுடைய ஆபிசிலும் ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களுக்கான வேலைகள் நடப்பது எனக்கே சந்தோஷமா இருக்கு என்றார் லிங்கு.
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தின் பிரஸ்மீட்டில்தான் இப்படி தன்னம்பிக்கை டானிக்கை ஊட்டினார் அவர். படத்தின் பாடல் ஒன்றும் ட்ரெய்லரும் திரையிடப்பட்டது. ஒரு வெற்றிப்படத்தின் அத்தனை சகுனங்களும் அதில் வெளிப்பட, பாலாஜியின் பொய்யில்லாத பேச்சு லிங்குசாமியின் பேச்சுக்கு கொஞ்சமும் குறைவில்லாத நிறைவை தந்தது.
காதல் படத்தை நான் லிங்குசாமிக்குதான் இயக்கி தருவதாக இருந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் அதை ஷங்கர் சாரே தயாரித்தார். மறுபடியும் அந்தளவுக்கு உணர்வு பூர்வமான ஒரு படத்தை லிங்குசாமிக்காக தரணும் என்று நினைத்தேன். கல்லு£ரி சரியா ஓடவில்லை என்பதால் எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. பல மாதங்கள் கழித்து ஒரு படம் பண்ணலாம் என்று லிங்குசாமியிடம் சொன்னதும் கதையை கூட கேட்காமல் சரி என்றார்.
No comments:
Post a Comment