Something ...
Monday, 31 October 2011
அடிக்கடி நீக்கம் அதிர்ச்சியில் நடிகை
வெப்பம் படத்தில் நடித்தவர் பிந்து மாதவி. அதன்பின் தமிழ்சினிமாவில் கோட்டை
கட்டலாம் என்று நினைத்திருப்பார். ஆனால் கொட்டகை கட்டி கூட குடியேற முடியாதளவுக்கு போய் கொண்டிருக்கிறது நிலைமை. காரணம், ஒப்பந்தம் ஆன படங்களில் இருந்தே இவரை நீக்கிக் கொண்டிருக்கிறார்கள் இப்போது.
சுந்தர்சி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் மசாலா கஃபே படத்தில் விமலுடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் பிந்து மாதவி. அப்புறம் என்ன நடந்ததென்று தெரியவில்லை. இவரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஓவியாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் சுந்தர்சி. சரி இவர்தான் இப்படி என்றால், ஈரம் அறிவழகனுக்கு யார் சொன்னார்களோ, அங்கேயும் பிரச்சனையாம்.
இவர் இயக்கிக் கொண்டிருக்கும் வல்லினம் என்ற படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துக் கொண்டிருக்கிறார். நகுல் ஹீரோவாக நடிக்கிறார். முதலில் இவருக்கு ஜோடியாகதான் பிந்து மாதவியை ஒப்பந்தம் செய்தாராம் அறிவழகன். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்தே போனது. இப்போது வந்து பிந்து வேண்டாம் என்கிறாராம். அதையும் ஒப்புக் கொண்ட தயாரிப்பு தரப்பு, மீண்டும் ரீ ஷுட்டிங்குக்கு தயாராகி வருகிறது.
எங்கேயோ தப்பு இருக்குன்னு மட்டும் புரியுது.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment