மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday, 19 November 2011

எல்லாமே எங்கம்மாதான்! - த்ரிஷா

Trisha with her Mom Uma Krishnanநான் சினிமா நடிகை ஆனதற்கும், இந்த நிலைக்கு வந்திருப்பதற்கும் என் அம்மாதான் காரணம் என்கிறார் நடிகை த்ரிஷா.

கிட்டத்தட்ட சினிமாவிலிருந்து ஒதுங்கி கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலாகப் போகிறார் என்று கூறப்பட்ட நேரத்தில், மீண்டும் சினிமாவில் பிஸியாகிவிட்டார் த்ரிஷா.

அதுவரை மகளுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் மும்முரமாக இருந்த அவர் அம்மா உமாவும், இப்போது அதில் கொஞ்சம் நிதானம் காட்ட ஆரம்பித்துள்ளார். மார்க்கெட் இருக்கும்போதே சேர்த்து வைத்தால்தானே ஆச்சு!

தெலுங்கில் இரண்டு படம், தமிழில் சமரன் மற்றும் ஒரு புதிய படம் என த்ரிஷா மார்க்கெட் ஸ்டெடியாக உள்ளது.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், தன் அம்மாதான் தன் வெற்றிக்குப் பின்னாலிருக்கும் நபர் என்று கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், "எனக்கு எல்லாமே என் அம்மாதான். என் முதல் பெஸ்ட் பிரண்டும் அவர்தான். எப்போதும் எதுக்கும் தடை போட மாட்டார். அவர் விருப்பங்களை என்மீது திணிக்க மாட்டார். 

நான் சினிமாவுக்கு வரும்முன்பு மாடலிங் பண்ணேன். அதற்காக படிப்பு பாதிக்கப்பட்டது. ஆனால் என் அம்மா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. 

மாடலிங் செய்ய அனுமதித்தார். மாடலிங், மிஸ் சென்னை, மிஸ் இந்தியா என மாடலிங்கில் என் கேரியர் கிராஃப் ஏறியபோதுதான் இயக்குனர் பிரியதர்ஷன் நடிக்க அழைத்தார்.

முதல் படமான 'லேசா லேசா' படம் தோற்றதும் சினிமாவே வேண்டாம்னு விலக நினைச்சேன். ஆனால் என் அம்மாதான் அப்போது எனக்கு மனவலியை தந்தாங்க. அடுத்தடுத்த படங்களில் எனக்கு பாராட்டு... வெற்றி எல்லாமே கிடைச்சிடுச்சி," என்றார்.
                                                              tamil.oneindia.in

கலைஞரை சந்திப்பேன்... -கவிஞர் வாலி பதில்


கை தராசை வைத்துக் கொண்டு யானையை எடை போட்ட கதையாகதான் இருக்கும் கவிஞர் வாலியின் சினிமா அனுபவங்களை சில வாரங்களில் தொகுத்தளிக்கிற முடிவும். ஆனாலும் அப்படி ஒரு இனிய ரிஸ்க்கை எடுக்க துணிந்திருக்கிறார்கள் வசந்த் டி.வியும் சாதக பறவைகள் சங்கரும். இந்நிகழ்ச்சியின் நிர்வாக தயாரிப்பாளர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி.
வாலி 1000 என்ற தலைப்பில் கவிஞர் வாலி பற்றிய இனிமையான நிகழ்ச்சியைVaaliவழங்கவிருக்கிறார்கள் இவர்கள். இந்த நிகழ்ச்சி பாடலை பெற்ற ஸ்தலம், கோலிவுட்-வாலிவுட், நினைவோ ஒரு பறவை, உன்னால் முடியும் தோழா, காஃபி வித் கவிஞர் என்ற ஐந்து பிரிவாக ஒளிபரப்பாகவிருக்கிறது.
ஏ.வி.எம் சரவணன், எஸ்பி.முத்துராமன், இயக்குனர் மகேந்திரன், எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் தேவா, எஸ்.ஜே.சூர்யா, டைரக்டர் கதிர், எல்.ஆர்.ஈஸ்வரி, குஷ்பு உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களை சந்திக்க வைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை எடுத்து முடித்துவிட்டார்களாம். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார் கவிஞர் வாலி.
பல்வேறு திரையுலக பிரமுகர்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் சந்திக்கிறீர்கள், கலைஞரையும் சந்திப்பீர்களா என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது.
நான் அழைத்தால் கலைஞர் வர மாட்டேன் என்று சொல்ல மாட்டார். எனக்கும் அவருக்கும் நாற்பத்தைந்து கால நட்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு யாரையும் நான் இதுவரை அழைக்கவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் அழைத்திருக்கிறார்கள். நிச்சயம் கலைஞரை நான் சந்திப்பேன் என்றார் வாலி.
ஆட்சி மாறியதும் 'ரங்கநாயகி' என்றெல்லாம் கவிதை எழுதுகிறீர்களே, அந்தகால புலவர்கள் மாதிரி அரசவையை இடித்துரைக்க முடியாதா உங்களால்? இது இன்னொரு கேள்வி.
இலங்கை பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை பாராட்டி அந்த கவிதையை எழுதினேன். ஆனால் நான்தான் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது பார்வதியம்மாளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் அனுமதி மறுத்ததை கண்டித்தும் கவிதை எழுதினேன். அந்த கவிதையை பாராட்டி நிறைய பேர் பேசினார்கள். வைகோ கூட அதை தன் சங்கொலி பத்திரிகையில் வெளியிடவா என்று அனுமதி கேட்டு வெளியிட்டார். சமீபத்தில் தீக்குளித்த செங்கொடி பற்றியும் கவிதை எழுதியிருக்கிறேன். நாட்டில் நடக்கிற அன்றாட பிரச்சனைகள் பற்றி எழுதிக் கொண்டிருந்தால் அதை தவிர வேறு வேலை எதுவும் செய்ய முடியாது என்று இந்த கேள்விக்கு சற்று விரிவாகவும் சூடாகவும் பதிலளித்தார் வாலி.

சிவகுமாரின் பேச்சு -சீறும் இணையதளம்


நடிகர் சிவகுமாரின் இலக்கிய சொற்பொழிவு பல ஆண்டுகாலமாக இலக்கிய சொற்பொழிவாற்றி வரும் அறிஞர்களை கூட வியப்பில் ஆழ்த்துகிற அளவுக்கு இருந்து வருகிறது. மிக குறுகிய காலத்தில் இப்படி ஒரு நற்பெயரை எடுத்திருக்கும் அவர் சில நேரங்களில் தேவையில்லாத விஷயங்களை பேசி வருவதாக ஆதங்கப்பட்டிருக்கிறது ஒரு இணையதளம்.
அதை அப்படியே வாசகர்களின் பார்வைக்கு வைத்திருக்கிறோம். இது தொடர்பான எல்லா விமர்சனங்களுக்கும் சம்பந்தப்பட்ட இணையதளமும், நடிகர் சிவகுமாருமே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இணைப்புக்கு பின்வரும் தொடர்பை சொடுக்குக- http://bit.ly/tkqB2M
திரு. சிவக்குமார் அவர்களே!
சமீப காலமாக உங்களின் ஆக்ரோஷமான மேடைப் பேச்சை கேட்கையில் எங்களுடைய நாடி நரம்புகளெல்லாம் புடைக்கிறது; தமிழ் மணக்கிறது; உணர்ச்சி பீறிட்டு வருகிறது.
குறிப்பாக பெண்பிள்ளைகள் குழுமியிருக்கும் கல்லூரி வளாகத்தில் உங்கள் Siva Kumarசொற் பொழிவு என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு ஆலோசனை தருகிறேன் என்ற சாக்கில் "கழிப்பறை வடி காலில் 2 டன் கருத்தடைச் சாதனம் புதையுண்டுக் கிடந்ததாக எனக்குத் தகவல் வந்தது" என்று பயமுறுத்தி பெற்றோர் களின் வயிற்றில் புளியைக் கறைக்கிறீர்கள். ஒரு கருத் தடைச் சாதனத்தின் எடை சுமார் ஒரு கிராம் என்று வைத்துப் பார்த்தாலும் நீங்கள் சொன்ன கணக்குக்கு சுமார் இரண்டு மில்லியன் கருத்தடைச் சாதனம் வருகிறது.
எந்த கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் கழிப்பறையில் கருத்தடைச் சாதனத்தை அவர்கள் பணியாளர்களின் உபயோகத்திற்காக இருப்பு வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுக் கூற முடியுமா? உங்களுடைய கூற்றை கேட்கையில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எங்கள் குழந்தைகள் அனைவரும் கற்பிழந்தவர்கள் என்ற மாயையை உருவாக்கி இருக்கிறீர்கள்.
இளைய சமுதாயம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தொடங்கும் உங்கள் மேடைப்பேச்சு, உணர்ச்சிகரமாக உள்ளத்தைத் தொட வேண்டும் என்ற பாவனையில் தொடர்ந்து, தமிழனத்தையும் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தும் ரீதியில் வெளிப்படுவது கடுமையான கண்டனத்துக்குரியது. பராசக்தி, மனோகரா, கந்தன் கருணை திரைப்பட வசனங்களை நீங்கள் பக்கம் பக்கமாக மனனம் செய்து உணர்ச்சிகரமாக மேடையில் பேசுகையில் உங்களிடம் உள்ளத்தை பறிகொடுத்த எங்களுக்கு இதுபோன்ற உங்களின் கருத்து எங்கள் முகத்தைச் சுளிக்க வைக்கின்றது.
"பிளவுபடாத சென்னை ராஜதானியிலே ஒரு பெரிய நடிகர் இருந்தாரு. அவரு நல்ல பாடுவாரு, ஆடுவாரு. நல்ல தேஜஸ். அவர் ஒரு கச்சேரி பண்ணுனா, முடியும்போது குடும்பப் பெண்கள் கேட்பாங்க அவுங்க புருஷன்கிட்ட. ஐயா உங்களுக்கு 3 குழந்தை பெத்தேன். அது வேஸ்ட். இவரு மகா புருஷன். இவருக்கிட்ட போயி ஒரு குழந்தையை பெத்துக்கிறேன். நம்ம வீட்டுலே ஒரு மகா புருஷன் இருக்கோணும்" என்று கூறி தாகத்தை தணிப்பதற்கு தமிழ்ப் பெண்கள் தயாராக இருந்தார்கள் என்ற தீராத பழியை சுமத்தியிருக்கிறீர்கள்.