மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday, 22 October 2011

90 கோடியை தொட்ட 7 ஆம் அறிவு

வியாபார விஷயத்தில் எந்திரனை தொட்டு விடும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு 7am Arivuவந்த 7 ஆம் அறிவு, அதிகாரபூர்வமாக தொட்டே விட்டது. கிட்டதட்ட 90 கோடி ரூபாய் வியாபாரம் ஆகியிருக்கிறதாம். சிட்டி, என்எஸ்சி, திருச்சி உள்ளிட்ட ஐந்து ஏரியாக்களை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜெமினி லேப் நிறுவனம். எந்திரன் படத்தை வெளியிட்டதும் இவர்கள்தான். வெறும் சூர்யா நடித்த படத்திற்கு இத்தனை மாஸ் இல்லை. கூடவே முருகதாசும் இருப்பதால்தான் இந்த மாஸ் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இதே முருகதாஸ் அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். சம்பளம் எவ்வளவு தெரியுமா? 12 கோடி. இது ஷங்கரின் சம்பளத்தை விட ரெண்டு கோடி அதிகம். ஒரு விழாவில், 'எவ்வளவுதான் சம்பாதிச்சாலும், காலையில் நாலு இட்லிக்கு மேல சாப்பிட முடியுமா?' என்று தத்துவம் பேசியவர் முருகதாஸ். (கேக்கும்போதே சிரிப்பு சிரிப்பா வருதுல்ல?)
            www.tamilcinema.com

ரா நூறு, ஆயிரம் அறிவு... வேலாயுதம் டைரக்டர் டென்ஷன்


மகள் வர்ணிகாவையும் அழைத்துக் கொண்டு பிரஸ்சை மீட் பண்ண வந்திருந்தார்Jeyam Rajaஜெயம் ராஜா. இந்த தீபாவளி வழக்கத்தை போல இல்லாமல் இந்த முறை ரொம்ப விசேஷமோ விசேஷம். இதுவரை அவர் இயக்கிய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்த தீபாவளிக்கு விஜய் என்ற மாஸ் முதலைக்கு ரீல் ரீலாக தீனி போட்டிருக்கிறாரல்லவா? அந்த சந்தோஷம்தான் முகத்தில் தாண்டவமாடியது!
ஜவுளிக்கடைக்கு துணி எடுக்கப் போனா அங்க கேட்கிறான், சார் இந்த வருஷம் எந்த படத்தை டப்பிங் பண்ண போறீங்கன்னு. டப்பிங்குக்கும் ரீமேக்குக்கும் வித்தியாசம் தெரியாதவங்க கூட லேசா கிண்டல் பண்ணுற அளவுக்கு நான் பண்ணிய எல்லா படங்களும் ரீமேக்தான். ஆனால் வேலாயுதம் என்னோட கற்பனையில் உருவான படம். ஆசாத் என்ற தெலுங்கு படத்திலிருந்து ஒரு சின்ன லைன் மட்டும் எடுத்திருக்கேன். அதுக்கு எனக்கு உரிமை உண்டு. ஏன்னா இந்த படத்தை இயக்கிய திருப்பதிசாமியும் நானும் திக் பிரண்ட்ஸ். இந்த கதையை உருவாக்கும்போதே நான் அவரோட பல நாள் டிஸ்கஷன்ல இருந்திருக்கேன் என்றார்.
விஜய் படங்கள் வரிசையாக பிளாப் ஆகிட்டு இருக்கு. இந்த படமாவது அவருக்கு ஹிட் கொடுக்குமா என்றொரு கேள்வி நிருபர்களிடமிருந்து. Velayuthamஅதற்கு ராஜா சொன்ன பதில் அப்சலூட்லி கரெக்ட்! அது என்ன?
விஜய் மார்க் போடுகிற ஸ்டேஜையெல்லாம் கடந்துவிட்டார். இன்றைக்கு அவர் பெரிய மாஸ் ஹீரோ. படம் வெளியாகிற நாளில் தியேட்டருக்கு திரண்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள். நீங்கள் சொல்வது போல தோல்வி என்பதையெல்லாம் தாண்டிய மாஸ் ஹீரோ அவர். வேலாயுதம் விஜய் படங்களிலேயே தி பெஸ்ட் படமாக இருக்கும். ரா ஒன் என்ன, ரா நூறு கூட வரட்டுமே, ஆயிரம் அறிவு கூட வந்து மோதட்டுமே? வேலாயுதம் பெரிய வெற்றியடையும். அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.
ஜெயம் ராஜா இப்படியெல்லாம் பேசியதே கிடையாது. அடுத்த படத்தை சவாலுக்கு அழைத்ததும் இல்லை. இந்த முறை மட்டும் என்னாச்சு சகோதரா?
                                www.tamilcinema.com

பிம்பிலாக்கி பிலாபி... ரஜினிகாந்த் படப் பாட்டு


Peruman
அதென்னவோ தெரியவில்லை, புதுமுகங்கள் நடிக்கிற படம் என்றால் ஆடியன்ஸ் மத்தியில் அப்படியொரு அலட்சியம். நாலு பேரிடம் விசாரித்து, பத்திரிகை விமர்சனங்களை படித்து, அப்புறமும் அடங்காமல் கதவிடுக்கு வழியே சில சீன்களை பார்த்துதான் டிக்கெட்டே வாங்குகிறார்கள். 'படம் நல்லாதான் இருக்கு'ன்னு கலெக்டர் ஆபிஸ்ல ஒரு சர்டிபிகேட் வாங்கிட்டு வந்துடேன் என்று கேட்காத வரைக்கும் சவுரியம்டா சாமி என்று புலம்புகிறார்கள் தயாரிப்பாளர்களும்.
இந்த போக்கு வயிற்றுப் போக்கை விட கொடுமையாக வாட்டிக்   கொண்டிருப்பதால்,புதுமுகங்கள் நடிக்கிற படங்களை எப்படியாவது மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த ஏராளமாக யோசிக்க வேண்டியிருக்கிறது. ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரத்திற்கு இருக்கிற சக்தி அவரது பெயரை போட்டால் கிடைக்கும் என்று நம்பி இறங்கினார்களா, அல்லது கதையே ரஜினியை பின்புலமாக கொண்டதா தெரியவில்லை. பெருமான் தி ரஜினிகாந்த் என்றொரு படத்தை தயாரித்து வருகிறார்கள் கோடம்பாக்கத்தில்.
இப்படியொரு கதையை படமாக்க முடிவு செய்ததுமே ரஜினியை சந்தித்து இந்த டைட்டிலுக்கு பர்மிஷன் கேட்டாராம் டைரக்டர் ராஜேஷ் கண்ணன். இவர் ரஜினிக்கு முன்பே அறிமுகமானவர் என்பதால் இந்த விசேஷ சலுகை. இல்லையென்றால் ரஜினி வீட்டு காம்பவுண்ட் சுவரை டச் பண்ண முடியாதல்லவா?
என் பெயரை வைக்கிற அளவுக்கு கதையில் அப்படியென்ன அவசியம் என்றாராம் ரஜினி. அப்புறம் கதையை அவருக்கு சொல்லிக் காட்டியிருக்கிறார் டைரக்டர். முழு கதையையும் கேட்ட ரஜினி, ராஜேஷ் கண்ணனின் முதுகில் தட்டிக் கொடுத்து, நல்லாயிருக்கு. நல்லபடியா பண்ணுங்க என்று கூறினாராம்.
ஏதோ அட்ராக்ஷனுக்காக இந்த பெயரை வைக்கல. நிஜமாகவே ரஜினி சாரை சுற்றிதான் கதை. அது என்னன்னு இப்பவே சொல்ல முடியாது. படம் பாருங்க. கண்டிப்பா பிடிக்கும் என்றார் ராஜேஷ். படத்தில் ஒரு பாட்டு வைத்திருக்கிறார்கள். பிம்பிலாக்கி பிலாபி... இதுதான் பாடலின் முதல் வரி. படம் எப்போது ரிலீசானாலும் அந்த வருஷத்தின் சர்ர்ர்ர்யான குத்துப்பாட்டாக இது இருக்கும். அது நிச்சயம். சத்தியம். (பார்த்துட்டோம்ல...?!)
                                     www.tamilcinema.com