மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Monday, 7 November 2011

அப்புறமும் எதுக்கு சகவாசம்? -பந்தாடப்படும் பிரபுதேவா்


எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. விரைவில் திருமண தேதியை அறிவிப்போம் என்று நயன்தாரா கொடுத்த அறிக்கை, இன்னும் அறிக்கை லெவலிலேயே இருக்கிறது. அடுத்த ஸ்டெப்பை பற்றி யோசிக்கவே இல்லை மாஸ்டர்.
ஆனால் அடுத்தடுத்த அம்புகளால் மனம் நோக வைக்கிறார்களாம் இவரை. எப்படி?Prabhu Devaஇதுவரை நயன்தாராதான் பிரபுதேவாவுக்கு கடிவாளம் போட்டு வந்தார். என்னை கேட்காமல் மட்டுமல்ல, கேட்டு கூட பழைய வீட்டு பக்கம் போகக் கூடாது என்று கட்டளை போடுகிறார் அவர். ஆனால் நயன்தாராவுடன் சேர்ந்து கொண்டு பிரபுதேவாவின் அப்பாவும் வார்த்தைகளை வீச, நிலைகுலைந்து போயிருக்கிறாராம் மாஸ்டர்.
வெட்டி விட்டாச்சு. அப்புறம் எதுக்கு அந்த வீட்டு சகவாசம்? இனிமேலாவது புது வாழ்க்கையை பற்றி யோசி என்கிறாராம் மகனிடம். கண்ணுக்கு தெரியாத கம்பி வலையாக சுற்றிக் கொண்டிருக்கிறது பழைய பாசம். அவ்வளவு சீக்கிரம் அறுத்தெறிய முடியுமா என்ன?
சமையல் குறிப்பை படித்தே பசியாறுவது போலதான் சட்டத்தை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்துவதும்!

லூர்து மேரியை பார்க்கணும்... -அஞ்சலியின் ஆசை


முதல் படம் கற்றது தமிழ். அந்த பெயரை நிலை நாட்டுவதற்காகவே தமிழ் கற்று தேறிவிட்டார் அஞ்சலி. அக்ஷர சுத்தமாக அவர் பேசும் தமிழ் கேட்டால் அதற்காகவே நாலு வெண்பாவை மெனக்கெட்டு எழுதி ஃபிரேம் போட்டுக் கொடுக்கலாம்.
தமிழில்தான் தேறியாச்சே, அப்புறம் வட்டார பாஷையில் கலக்க வேண்டியதுதானே?Thambi Vettothi Sundaramஅதிலும் விடாப்பிடியாக நின்று கன்னியாக்குமரி தமிழ் பேசியிருக்கிறாராம் அஞ்சலி. இவரது நடிப்பில் இந்த வாரம் வெளிவரப்போகும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்திற்காகதான் இப்படி ஒரு அர்ப்பணிப்பு. இவரது காரின் மீது கல்வீச்சு நடந்த பின்பும் அப்படத்தில் துணிச்சலோடு நடித்து முடித்துக் கொடுத்தது இன்னொரு அர்ப்பணிப்பு.
கன்னியாக்குமரி பகுதியில் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய அந்த பாத்திரத்தை நிஜமாகவே நேசித்த லூர்து மேரி கேரக்டரில் நடித்திருக்கிறார் அஞ்சலி. இந்த லூர்து மேரி இப்போதும் உயிருடன்தான் இருக்கிறாராம். இந்த படத்தை அவர் பார்ப்பாரா என்பது இருக்கட்டும். லு£ர்துமேரியை பார்க்க அத்தனை ஆர்வமாக இருக்கிறார் அஞ்சலி.
மேலும் படிக்க....

Sunday, 6 November 2011

நீலகிரி மாவட்டத்தில் மாயமான சினிமா டைரக்டர் மர்ம சாவு!

நீலகிரி மாவட்டத்தில் மாயமான சினிமா டைரக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே உள்ள கொடலட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (38). இவர் ஒசம்முங்காரு என்ற படுகர் மொழி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் பாடல் கேசட் விற்பனை நடைபெற்று வருகிறது. வெற்றிவேல் ஊர் ஊராக சென்று பாடல் கேசட்டை விற்பனை செய்து வந்தார். 

கடந்த 4 நாட்களுக்கு முன் பாடல் கேசட் விற்பதற்காக கொலக்கம்பை வந்த அவர் திடீரென மாயமானார். இந்நிலையில் தூதுர் மட்டம் அரசு பள்ளி அருகே உள்ள வனப்பகுதியில் முட்புதருக்குள் டைரக்டர் வெற்றிவேல் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த பொது மக்கள் கொலக்கம்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

தகவல் கிடைத்ததும் குன்னூர் டி.எஸ்.பி. மாடசாமி, கொலக்கம்பை இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். டைரக்டர் மர்ம சாவு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டைரக்டர் வெற்றிவேலுக்கு திருமணம் ஆகி விட்டது. 

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். எனவே மனைவியின் உறவினர்கள் யாராவது வெற்றி வேலை அடித்து கொலை செய்து பிணத்தை முட்புதரில் வீசி சென்றிருக்
கலாமா? அல்லது முன் விரோதத்தில் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.